பிரதிபலிப்பு


தமிழடியார் சீர்பரவுவார்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

    சாலமன் மன்னர் ஒரு மாவீரர்; சிறந்த நிர்வாகி; புத்திமான்.  
    தற்கால இஸ்ரேல் நாடு இருக்குமிடத்தில் பண்டைக்கால யூதேயா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இருந்தன. அவற்றிற்கு அவர் அரசராக இருந்தார். அக்கம்பக்கத்து நாடுகளில் பலவற்றிற்கு பேரரசராகவும் அவர் இருந்தார்.
    As wise as Solomon என்று மேற்கத்திய நாட்டினர் அனைவருமே  கொண்டாடும் அளவுக்கு புத்தியும் அறிவும்பெற்றவர்.
    இவருக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்வார்கள்.  ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இவரைப் பற்றி அகத்தியத்தில்  பேசியிருக்கிறோம்.

    சாலமனைப் பற்றி பைபிலிலும் குர்ஆனிலும்(சுலைமான் நபி) பார்க்கலாம்.
    பைபிலின் Book of Kings பகுதியில் சாலமனைப் பற்றி
இருக்கும்.
    பைபில், குர் ஆனில் வழங்கும் செய்திகள் தவிர அவரைப் பற்றி பலவிதமான வரலாற்றுச் செய்திகளும் கர்ணபரம்பரைச் செய்திகளும் கதைகளும் உண்டு.
    அவருடைய நாட்டின்மீது எகிப்தியப் ·பேரோ பேரரசன் ஒருமுறை படை
யெடுத்தான்.  சாலமனுடைய சொந்த நாடாகிய இஸ்ரயேல்
நாட்டைவிட எகிப்து
அதிக சக்தி  வாய்ந்தது. எகிப்திடம் போர்த்தேர்கள்
ஆயிரக்கணக்கில் இருந்தன.
எகிப்தின் மக்கள்தொகையும் அதிகம்.
சாலமனின் படைகள் தோற்கும் நிலையில் இருந்தன.
    அத்துடன் இஸ்ரயேலின் சகாப்தமும் முடிந்துவிடும்போலிருந்தது. பாவம்,
இஸ்ரயேலியர். காலவெள்ளத்தில் அவர்கள் பிறர் ஆதிக்கத்தில் இருந்ததே
அதிகம். சாலமனின் தந்தை டேவிட், ·பில்லிஸ்த்தீனியரை வென்று நிறுவிய
சுதந்திர நாடாக இஸ்ரயேல் விளங்க ஆரம்பித்து அதிக காலமாகவில்லை.
    ஒருநாள்..........
    மாலை மயங்கிய நேரம்.
    மிகவும் கலக்கத்துடன் சாலமன் தன் படையினர் முகாமிட்டிருந்த குன்றின் சரிவில், ஓரிடத்தில் தன்னுடைய பொன் தகடு வேய்ந்த பளபளப்பான கேடயத்தின்மீது சாய்ந்துகொண்டு யோசனையற்றதோர் நிலையில் இருந்தார். என்ன செய்தால் என்ன? வெற்றியே அடைய முடியாத நிலையல்லவா?
    எகிப்திய படைகள் சில மைல் தூரத்தில் பாடியிறக்கி யிருப்பதாகச் சாரணர்கள் சொல்லியிருந்தனர். அதிகாலையில் சூரியன் உதித்த சிறிது நேரத்தில் தேர்ப்படைகளை முன்னால் வைத்துக்கொண்டு, இஸ்ரயேலியப் படையின்மீது அதிரடிப்பாய்ச்சலாக அதிவேகத்தில் விழுந்து,  அவர்களின் படை அணிகளை உடைத்து அழித்துவிடுவதே எகிப்தியரின்  நோக்கம்.
    மாலை இரவாக மாறியது.
    பௌர்ணமி. எதிர்த்தாற்போல கிழக்கில் பூரணசந்திரன் பிரகாசித்தவாறு உதித்து மேலேறி வந்துகொண்டிருந்தது.
    இரவு சற்று முற்றிய நேரம். அப்போது சாலமனின் கவனத்தை ஏதோ ஒன்று ஈர்த்தது. அவருடைய கேடயத்தில் பூரண சந்திரனின் ஒளிபட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அந்த ஒளியின் பிரதிபிம்பத்தில் அவர் மனம் லயிக்காமல் லயித்தது.
    அவ்வளவுதான்.
    எழுந்தார்.
    தன்னுடைய படைத்தலைவர்கள் அனைவரையும் அழைத்தார்.
ஒரே நாழிகை நேரம்தான்.
    போர் வீரர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கேடயங்களைப் பளபளவென்று  பாலிஷ் போட்டு மின்னச்செய்தனர். அடிமைகளும் வேலைக்காரர்களும், அந்தக ்குன்றின் சரிவையட்டி வடக்கு தெற்காக ஒரு பெரிய நீண்ட அகழியை வெட்டினர். அந்த அகழிக்கு அப்பால் தரை சற்றுத்தூக்கலாக இருந்தது. அந்தப்பக்கத்திலிருந்து வருபவர்கள் மிக அண்மையில் வந்தாலும் கண்ணில் தட்டுப்படாத வகையில் அந்த அகழி இருந்தது.

    விடிந்தது.
    
    அகழிக்கும் குன்றின் சரிவுக்கும் இடைப்பட்ட இடத்தில் சாலமன் தன்னுடைய
படையை அணிவகுத்துக்கொண்டார்.

    ஒவ்வொரு வீரனும் தன்னுடைய கேடயத்தைத் திருப்பி வைத்திருந்தான்.

    சூரியன் உதித்த ஒரு நாழிகையில் எகிப்தியப்படையின் ஆரவாரமும் அது வரும் புழுதிப்படலமும் தென்பட்டது. இடி முழக்கம்போல குதிரைக் குளம்படிச் சப்தமும் போர்வீரர்களின் கூச்சல், குதிரைகளின் கனைப்பு, தேர்களின் ஓட்டத்தின் அதிர்வு, போர் வாத்தியங்களின் பேரோசை ஆகியவை காதைச் செவிடுபட வைத்தன. இரண்டாம் நாழிகை. கிழக்கே சூரியன்.கிழக்கே எகிப்தியப் படையும் தோன்றியது. பெரும்படை. தேர்கள் அலை அலையாக வந்து கொண்டிருந்தன. இஸ்ரயேலியர் இருந்த குன்றுச்சரிவிலிருந்து எகிப்தியப் படையின் முழுப்பரிமாணமும் தெரிந்தது.
    தேர்கள் அகழிக்கு அப்பால் வந்து விட்டன.
    அவ்வளவுதான்.
    சாலமன் தன் கையை அசைக்க, தளபதிகள்தங்கள் கொடிகளை உயர்த்தி ஆட்ட, இஸ்ரயேலியர்களின் தாரை, கொம்பு ஆகியவை முழங்கின.
    உடனேயே இஸ்ரயேலியப் படையின் ஒவ்வொரு வீரனும் தன்னுடைய
பளபளப்பாக்கப்பட்ட கேடயத்தை எகிப்தியத் தேர்களை நோக்கித் திருப்பிவிட்டான்.  
     சூரியனின் ஒளிபட்டுத் தகத்தகாயமாகப் பிரகாசித்த அந்தக்
 கேடயங்கள் சூரியக்கதிர்களை வாங்கிப் பிரதிபலித்து எகிப்தியத் தேர்களின்மீது திருப்பிவிட்டன. இஸ்ரயேலியர் கேடயங்களை லேசாக அசைக்க ஆரம்பித்தன்ர்.
    எகிப்திய தேர்கள் நிலைகுலைந்தன.
    ஏன்?
    அந்தக் கேடயங்களிலிருந்து பிரதிபலித்துவந்த சூரியக்கதிர்கள் தேர்ப்படைவீரர்களின் கண்களைக் கூசச்செய்தன. பெருங்கூச்சலுடன் தங்கள் கண்களை மறைத்துக்கொண்டு ஓட்டியதேர்ப்பாகர்களுக்கு எங்கே செல்கிறோம் என்பது அறவே தெரியவில்லை.
தேர்கள்  நேராக
வந்து அகழிக்குள் விழுந்தன. அடுத்தடுத்து அலை அலையாக வந்த
தேர்களும் முதலில் விழுந்த தேர்களின் மீது விழுந்தன. அடுத்து வந்தவை
அடுக்கடுக்காக அவற்றின்மீது மோதின. பின்னால் வந்த குதிரைகளும் நெறிபிறழ்ந்து சிதறி ஓடி  மோதி மரித்தன. காலாட்படைகளின் அணிகளும் குலைந்தன.
    பெரிய களேபாரம்.
    சாலமனின் சிறிய குதிரைப் படை சுற்றி வந்து எகிப்தியப் படைகளைத் தாக்கியது.
கேடயக்கார காலாட்படையினர் நீண்டஈட்டிகள், உருவிய வாள்கள் சகிதம் எகிப்தியப் படையின்அலங்கோலக் கோலத்தைச் சிதைக்க முன்னேறின.
    இப்படித்தான் சாலமன் தம்முடைய இஸ்ரயேல் நாட்டைப் பேரரசாக்கிக் கொண்டார்.
அத்துடன் எகிப்திய ·பேரோவின் மாப்பிள்ளையாகவும் ஆகினார்.

    ஸாலமன் மன்னனின் கதையில் கேடயத்தைப் பாலிஷ் செய்து அதில் சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கச்செய்து, அந்த பேரொளியால் எதிரித் தேர்ப்படையினரின் கண்களைக் கூசச்செய்து அவர் வெற்றி பெற்றார் என்று அறிகிறோம்.  

    இதே மாதிரி, ஆனால் சற்று வித்தியாசமான முறையில் பண்டைய கிரேக்கர்கள் ஒரு கடற்போரில் வெற்றியடைந்தனர்.

    ஸைராக்கஸ்(Syracus) என்னும் நகரம் கிரேக்கத்தில் இருந்ததொரு city state. அதாவது தற்காலத்து சிங்கப்பூர், வத்திக்கன், ஸான் மாரினோ, மொனாக்கோ
போன்றது.
`அது ஒரு துறைமுகத்தையும் கொண்டிருந்தது.

    அந்த ஊரில்தான் அக்காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த விஞ்ஞானியும் மேதையும் ரிஷியுமாக விளங்கிய ஆர்க்கிமெடெஸ் (Archimedes) வாழ்ந்தார்.

    ஏன் அவரை 'ரிஷி' என்று குறிப்பிடிருக்கிறேன்? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். Impossible தொடர்புகளை ஏற்படுத்தி சொல் தொடுப்பு விளையாட்டெல்லாம்
விளையாட முடிகிறது.

    இதிலும் கொஞ்சம் சிந்தனையைச் செலுத்திப் பார்ப்பதுதானே?

    கிருஸ்துவுக்கு முன் 215-ஆம் ஆண்டில் ரோமர்கள் ஸைராக்கஸின் மீது படை
யெடுத்து வந்தனர். அன்றைய காலகட்டத்தில் கப்பல் கட்டுமானப்
பொறியியலில் மிகவும் மேம்பட்டு விளங்கியவர்கள் ரோமர்கள். போர்க்கப்பல்துறையில்
உலகிலேயே அதிக முன்னேற்றத்துடன் இருந்தனர்.

    அப்பேற்பட்ட போர்க்கப்பல்கள் பலவற்றுடன் ரோமர்கள் வந்து சேர்ந்தனர்.
    ஸைராக்கஸ¤க்குப் போர்க்கப்பல்களும் போதாது. அதன் படை பலமும் பத்தாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்க்கிமெடெஸ் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்.

    போர் வீரர்கள் அனைவருக்கும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பெரிய கேடயங்களைக் கொடுக்கச்செய்தார். அந்தக் கேடயங்களுக்கு  மெருகேற்றி, பாலிஷ¤ம் போடச் செய்தார்.

    அவர்களை ஸைராக்கஸின் கடற்கரையில்சற்று உயரமான,  தக்க இடத்தில் வரிசைகளாக நிற்கச்செய்தார்.
    எதிர்ப்புறம் சூரியன் இருக்கும் வேளையில், அனைவரும் தத்தமது கேடயத்தை ரோமர்களின் கப்பல்கள் இருக்கும் திசையில் திருப்பிக் கொண்டனர்.
    அனவரும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ரோமக்கப்பலை நோக்கிக் கேடயத்தைக் காட்டினர்.
    அனைத்து கேடயத்திலும் சூரிய ஒளி பட்டு, பிரதிபலித்து, அந்தக் குறிப்பிட்ட ரோமர் கப்பலில் பட்டது. முதலில் பாய்மரம் பற்றி எரிந்தது. அடுத்த சில வினாடிகளில் கப்பல் எரிந்தது.
    தளபதிகள் கட்டளை கொடுக்கவும் அடுத்தாற்போல இன்னொரு கப்பலை நோக்கிக் கேடயங்களைத் திருப்பி, அதையும் பற்றவைத்தனர். இப்படியே அடுத்தடுத்து ரோமர் கப்பல்கள் எரிக்கப்பட்டன.

    "பாய் போச்சு; மரம் போச்சு" என்று ரோமர் கப்பல்கள் ஓடிப்போயின. "துண்டு போச்சு; துணி போச்சு",என்று கப்பல் ஓடமாட்டது  அல்லவா? அதான் - "பாய் போச்சு; மரம் போச்சு".

    இந்த விபரத்தை ப்லுட்டார்க், அந்த்தீமியஸ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

    ஆனால் பிற்காலத்தில், "இதெல்லாம் பன்றிக்கழுவல், காளைச்சாணம்" என்று அறிஞர்கள் தள்ளிவிட்டனர். (Hog wash, Bull shit என்ற சொற்றொடர்கள்தான்
இப்பாடு பட்டிருக்கின்றன).


    முப்பதாண்டுகளுக்கு முன்னர், டாக்டர் யவான்னிஸ் ஸக்காஸ் என்னும் கிரேக்க எஞ்சினியர் ஒருவர், ஆர்க்கிமெடெஸ் பற்றிய இந்தச் செய்தி உண்மைதானா என்று கண்டறிய முற்பட்டார்.

    ஆகவே 50 கேடயங்களைத் தயார் செய்து அவற்றின்மீது வெண்கல முலாம் பூசி, மெருகேற்றி, பாலிஷ் செய்து, அவற்றை 50 கிரேக்கக் கப்பற்படை வீரர்களிடம் கொடுத்து, வரிசையாக நிற்கச்செய்தார். ஆர்க்கிமெடெஸ் முறையைப் பின்பற்றி, கடலில் தூரத்தில் நிறுத்தப்பட்ட படகு ஒன்றின்மீது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச்செய்தார்.

    சில வினாடிகளில் புகைந்தது. இரண்டே நிமிடங்களில் அந்தப் படகு எரிந்து போயிற்று.



    ஆர்க்கிமெடெஸ் சற்றுக் குவிந்த கேடயங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இன்னும் விரைவாக கப்பல்கள் எரிந்துபோயிருக்கும்.

    Concave mirror மூலம் சூரிய ஒளிக்கற்றைகளைப்பிரதிபலித்துக் குவியச்செய்து, மிகுந்த வெப்பத்தை ஏற்படுத்துவதுதான் இதன் தத்துவம்.

        இதெல்லாம் எந்தப் பாடப்புத்தகத்திலும்காணமுடியாது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU