சிம்மசொப்பனம்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா






                சொல்வழக்கில் சில சொற்கோவைகளும் வாக்கியங்களும் கலந்துவிடுகின்றன. அவை   ஏதாவது ஒரு கற்பனை அல்லது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
                ஆனால் அவற்றிற்கு ஏதும் அடிப்படையான உண்மை இருக்கிறதா என்று யோசித்துப் பார்ப்பதில்லை. சில விஷயங்கள் புராணங்கள் போன்றும் legends, myths போலவும் தோன்றும். அவற்றை அப்படியே யோசிக்காமல் தள்ளிவிடுவோம்.
                அப்படிப்பட்ட சிலவற்றில் ஒன்றுதான் "சிம்மசொப்பனம்" என்னும் சொல்வழக்கு.
    
                சிம்மசொப்பனம் என்றால் என்ன?

                "யானையையும் கொல்லக்கூடிய வலிமை வாய்ந்த சிங்கத்தையும் புலியையும் பற்றிய பயம் யானைக்கு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும்; ஆதலால், யானை தன்னுடைய கனவினில் சிங்கத்தைக் கண்டாலும்கூட நிலைகுலையும்; தூக்கத்திலிருந்து விழித்து அலறி அடித்துக் கொண்டு ஓடும்".
                இதைத்தான் "சிம்மசொப்பனம்" என்று கூறுவார்கள். சிலரூக்கு குறிப்பிட்ட ஒருவர்மீது உள்ள அதீத பயத்தைக்  குறிப்படுவதற்கு  உவமையாக இந்த சொல்வழக்கு பயன்படுத்தப்படுகிறது.

                இது ஒரு கற்பனைதான். Myth என்று சொல்வார்கள் அல்லவா? அந்த ரகத்தைச் சேர்ந்தது.

                யானைக்கு சொப்பனம் ஏற்படுமா என்பது யாருக்குத் தெரியும்?
                ஐயா, ஒரு hypothetical situation ஆக வைத்துக் கொண்டாலும்கூட சிம்ம சொப்பனம்தான் யானைக்கு ஏற்பட்டது என்று எப்படி தெரியும்?
                யானையின் கனவில் சிம்மம்தான் வந்தது என்று மனிதர்களுக்கு எப்படித் தெரியும்?
                யானை தன் கனாப் பற்றி யாரிடமும் கூறியிருக்காது. யானையை ஆயிரக்கணக்கில் கண்ட கனவைப் பற்றித்தான் ஆண்டாள் போன்றவர்கள் கூறக் கேட்கிறோம்.
                மாவுத்தன் பேசும் யானை பாஷையை யானை புரிந்து கொள்ளும். யானை அந்த பாஷையில் மாவுத்தனிடம் பேசமுடியாதே? யானை கனவு காண்பதையோ அல்லது கனவில் எந்தெந்த பொருள்களைக் காண்கிறது என்பதையோ கண்டுபிடிக்கக் கூடிய சாதனங்கள் ஏதும் கிடையாது. யானையின் மூளையில் ஏற்படும் மாறுதல்களை விளக்கும் பிரத்தியேகமான பெரும் ஈ.ஈ.ஜி. கருவிகளெல்லாம் தற்சமயம் கிடையாது.
                அவ்வாறு இருப்பினும்கூட அவற்றின்மூலம் யானையின் மூளையின் செயல்பாட்டைத்தான் ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியுமேயொழிய யானை தன் கனவில் என்னென்னவற்றையெல்லாம் காண்கிறது என்று குறிப்பிட்டு அறிந்து கொள்ளமுடியாது. தூக்கத்தின் நடுவே அது அலறியடித்து ஓடினால், அதைக் கண்டு தோராயமாக அது ஏதோ ஒரு கனவைக் கண்டிருக்கிறது என்று வேண்டுமானால் ஊகிக்கலாமே தவிர நிச்சயமாக ஏதும் கூற இயலாது.
                சாதாரணமாக புலியோ சிங்கமோ யானையைத் தாக்குவதில்லை.
யானையைக் கண்டால் புலியும் சிங்கமும்தான் ஓடிவிடும். புலிவேட்டையின்போது,  இந்திய மன்னர்களும் துரைமார்களும் யானைகளை மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். வேட்டையின்போது, தான் தப்பும் வழியை மறித்திருக்கும் யானையைத் தாக்கிவிட்டு புலி ஓடிவிடும். உணவுக்காகக்கூட  சிங்கம் புலிகள் யானையைத் தாக்காது. தனியாக இருக்கும் குட்டி யானைகளைக்கூட தாக்கும் சாத்தியங்கள் குறைவே. சிங்கம்புலி அருகில் திரிந்தால்கூட யானை, தனதுபாட்டுக்கு அசராமல், ஓடாமல் அலட்சியமாக நிற்கும். மற்ற மிருகங்கள்தாம் நிலை குலைந்து ஓடும்.   
                முதுமையடைந்த தள்ளாத யானைகள், காயம்பட்டவை, நோய்வாய்ப்பட்டவை, இறக்கும் தறுவாயில் உள்ளவை, பசி தாகத்தால் களைத்தவை முதலிய யானைகளைச் சிங்கங்கள் தாக்கும். சிங்கங்கள் மட்டுமல்ல கழுதைப்புலிகள் போன்றவையும் தாக்கக்கூடும்
                யானை அஞ்சக்கூடிய பிராணி இரண்டு இருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
                அவை என்ன?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$