ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்திரம்

சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
JayBee




                    மந்திர சாஸ்திரத்தில் மிகவும் வலுவான தேவதாக்களாகக் கருதப்படும் தெய்வங்கள் இருக்கின்றன.
                    ஆபத்துக்களை நீக்குவதற்கும், விபத்துகளைத் தவிர்ப்பதற்கும்,  அவற்றிலிருந்து காப்பதற்கும், பில்லி சூனியம், பரமந்திர க்ஷ¤த்ரப் பிரயோகம் ஆகியவற்றை உடைப்பதற்கும் பேய் பிசாசு, ராட்சச பூதர் முதலியவற்றை விரட்டுவதற்கு/அழிப்பதற்கும் என இந்த தேவதாக்க¨ளை மாந்திரீக பூர்வமாக வழிபடுவது உண்டு.
                    அதற்கெல்லாம் சில உபாசனைகள் வேண்டும்; உபதேசங்கள் வேண்டும்.
                    அவை இல்லாமல், அதே அளவுக்குப் பலன்கொடுக்கக் கூடியவற்றையும் அருளாளர்கள் தந்திருக்கிறார்கள்.
                    அவைதாம் துதிகளும் தோத்திரங்களும்.
                    மேற்கூறிய தேவதாக்களில் மிக முக்கியமான ஒருவர் ஆஞ்சநேயர்.
                    அவருக்குப் பல துதிகளும் தோத்திரங்களும் உண்டு.
                    அவருக்குரிய பல மந்திரங்கள் டாகினி சாகினி ஆகியவர்களை அவர் அழிப்பதைக் குறிக்கும். 'மாருதி ராக்ஷஸாந்தகம்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.
                    எதிரிகளை அழிப்பதற்கு அவருடைய வாலைத் தோத்திரம் செய்யும் மரபுகூட இருக்கிறது.
                    அந்த வாலால்தான் இலங்கையைக் கொளுத்தி அழித்தார்.
                    ராவணனுக்கும் மேலான ஆசனமாக உயர்த்திவைத்ததும் அந்த வால்தான்.
                    வாலால் கோட்டையேகூட கட்டியிருந்தார்.
                    ஆபத்தை நீக்குவதற்காக அனுமனை வழிபடும் தோத்திரம் இருக்கிறது.
                    'ஆபதுத்தாரக ஹனுமத்  ஸ்தோத்ரம்' எனப்படும் இந்த தோத்திரம் விபீஷணனால் துதிக்கப்பட்டது.

                    அந்தத் தோத்திரத்திலேயே அனுமனின் சாதனைகளும் குணங்களும் போற்றப்படுகின்றன. பலன்களும் அப்படியே சொல்லப்பட்டு வருகின்றன.
                    முதல் பாடலிலேயே ஆபத்துக்களை அழிப்பவராகவும் தற்செயலாக ஏற்படும் உத்பாதங்களை நாசம் செய்பவராகவும் கூறப்படுகிறது.
                    சீதைக்கும் ராமருக்கும் ஏற்பட்ட சோகம், துக்கம், பயம் ஆகியவற்றைப் போக்கியவர். மூவகைத் தாபங்களாகிய ஜன்ம, ம்ருத்யு, ஜரா - பிறப்பு,  இறப்பு, மூப்பு ஆகியவற்றை அழிப்பவர். மகாமாரியால் தோற்றுவிக்கப்பட்ட வியாதிகளையும் கிரகங்களால் ஏற்படும் பீடைகளையும் அழிப்பவர். அரக்கர்களின் உயிரை வாங்கி ராமருடைய உயிருக்குயிராய் விளங்கியவர்.
                    இந்தத் தோத்திரத்தை எப்போதெல்லாம் படிக்கவேண்டும்?
                    அரண்மனை வாசல், குகைகளுக்குள் நுழையும்போதும் பூதங்கள் இருக்குமிடத்தில், யானை, சிங்கம், பெரும்புலி, திருடர்கள் இருக்கும் காட்டுக்குள் செல்லும்போதும் இந்தத் துதியைச் செய்யவேண்டும். சிறையிலோ போர்க்களத்திலோ பிரயாணத்தின்போதோ பிரார்த்தனை செய்யப்பட்டால் அனுமன் எந்த விபத்தும் இல்லாமல் காப்பார்.
                    இதில் "ப்ரஹ்மாஸ்த்ர ஸ்தம்பநாயாஸ்மை நம: ஸ்ரீருத்ரமூர்த்தயே" என்று இருப்பதைக் கவனிக்கவேண்டும். ஆஞ்சனேயர் ருத்திரனின் அம்சமாகப் பிறந்தவர்.
                    'பிரமாஸ்த்திரத்தையே ஸ்தம்பனம் செய்த ஸ்ரீருத்ர மூர்த்தி'

                    ஆபதுத்தாரக ஹனுமத்  ஸ்தோத்ரம்

                    அஸ்யஸ்ரீ ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய விபீஷண ரிஷி: ஆபதுத்தாரக ஹனுமான் தேவதா
                    ஆபதுத்தாரக ஹனுமத் ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே வினியோக:

        த்யானம்

    வாமே கரே வைரிபிதம் வஹந்தம்
        சைலம் பரே இச்ருங்கல ஹாரிடங்கம்
    ததாந மச்சச்சவி யக்ஞ ஸ¥த்ரம்
        பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்சநேயம்
    ஸ¤பீத கௌபீந முதஞ்சிதாங்குளீம்
        ஸமுஜ்ஜ்வலந் மௌஞ்ஜ் யஜ்ஞோபவீதினம்
    ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ்ருதம்
        தம் ஆஞ்சனேயம் சரணம் ப்ரபத்யே.
ஆபந்நாகில லோகார்த்தி ஹாரிணே ஸ்ரீஹனூமதே
அகஸ்மா தாகதோத்பாத நாசனாய நமோஸ்துதே

ஸீதா வியுக்த ஸ்ரீராம சோகதுக்க பயாபஹ:
தாபத்ரிதய ஸம்ஹாரிந் ஆஞ்சநேய நமோஸ்துதே   

ஆதிவ்யாதி மஹாமாரீ, க்ரஹபீடாபஹாரிணே
ப்ராணாபஹர்த்ரே தைத்யானாம், ராமப்ராணாத்மனே நம:

ஸம்ஸார ஸாகராவர்த்த, கர்தவ்ய ப்ராந்த சேதஸாம்
சரணாகத மர்த்யானாம், சரண்யாய நமோஸ்துதே

ராஜத்வாரி பிலத்வாரி, ப்ரவேசே பூதஸங்குலே
கஜஸிம்ஹ மஹாவ்யாக்ர, சோரபீஷண காநநே

சரணாய சரண்யாய, வாதாத்மஜ நமோஸ்துதே
நம: ப்லவங்க ஸைன்யானாம் ப்ராண பூதாத்மனே நம:

ராமேஷ்டம் கருணாபூர்ணம், ஹநூமந்தம் பயாபஹம்
சத்ரு நாசகரம் பீமம், ஸர்வாபீஷ்ட பலப்ரதம்

ப்ரதோஷே வா ப்ரபாதே வா, யே ஸ்மரந்த் யஞ்ஜநாஸ¤தம்
அர்த்தஸித்திம் யச: கீர்த்திம் ப்ராப்நுவந்தி ந ஸம்சய:

காராக்ருஹே ப்ரயாணே ச ஸங்க்ராமே தேசவிப்லவே
யே ஸ்மரந்தி ஹநூமந்தம் தேஷாம் நாஸ்தி விபத் ததா

வஜ்ரதேஹாய காலாக்நி ருத்ராயாமித தேஜஸே
ப்ரஹ்மாஸ்த்ர ஸ்தம்பநாயாஸ்மை நம: ஸ்ரீருத்ரமூர்த்தயே

ஜப்த்வா ஸ்தோத்ரமிதம் மந்த்ரம் ப்ரதிவாரம் படேந்நர:
ராஜஸ்தாநே ஸபாஸ்தாநே ப்ராப்தவாதே ஜபேத்த்ருவம்

விபீஷண க்ருதம் ஸ்தோத்ரம் ய:படேத் ப்ரயதோ நர:
ஸர்வாபத்ப்யோ விமுச்யேத நாத்ர கார்யா விசாரணா

மர்க்கடேச மஹோத்ஸாஹ ஸர்வசோக விநாசக
சத்ரூந் ஸம்ஹார, மாம் ரக்ஷ இயம் தாஸம்ஸ்ச தேஹி மே

    இதி விபீஷண க்ருத ஆபத்துத்தாரக ஹநூமத்  ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
   

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU