எட்டாண்டுகளுக்கு முன்னால் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
Date: Tue, 16 Nov 1999 22:25:44 +0800
Subject: [agathiyar] Thamilzhil MaaBaaratham#1
தமிழில் மஹாபாரதம் முழுவதுமாகஇருக்கிறதா இல்லையா? ie. முழுக் கதையும் எழுதப்பட்டிருக்கிறதா அல்லது ஒரு பகுதி மாத்திரம் இருக்கிறதா? தெலுங்கில் மஹாபாரதத்தை ஒருவர் எழுதஆரம்பிக்க அது மூவர் கை பட்டுப் பின்னர் இனிதே முடிந்தது என்றுகேள்விப் பட்டிருக்கிறேன்.
மேலும் ஏதோ ஒரு காதை எழுதுவது அபசகுனமாகக் கருதப்பட்டதாகவும், அதை எழுத முனைபவர்கள் இறந்து விடுவார்கள் என்றும், அதனால் முதலில் எழுதியவர் அதை எழுதவில்லை என்றும், இரண்டாமவர் அந்தக்காதையை மாத்திரம் விட்டுவிட்டு மிச்சத்தை எழுதினார் என்றும், மூன்றாமவர் வந்து முடித்தார் என்றும் கேள்வி. வில்லி பாரதம் மஹாபாரதக் கதையை முழுவதும் உட்கொள்கிறதா இல்லையா? இல்லை என்றால் எது விடப்பட்டிருக்கிறது. அது போக மற்ற காப்பியங்கள் மஹாபாரதத்தை basis ஆக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கின்றனவா?
¡¢ஷிகேஷ்.
அப்போது நான் எழுதிய பதில்:
மாபாரதம் தமிழ்ப் படுத்தியது
மாபாரதத்தைத் தமிழ்ப்படுத்தும் வேலைமிகப் பழங்காலந்தொட்டு நடந்து வருகிறது.
நமக்குத் தொ¢ந்தவரையில் மதுரைத்தமிழ்ச ்சங்கத்திலேயே அது செயல் படுத்தப ்பட்டிருக்கிறது.
சின்னமனூர் செப்பேடு என்று ஒரு பழையசாசனம். அதனுடைய ஆரம்பப்பகுதியில் பாண்டியர்களின் பழைய வரலாற்றைச் சொல்கிறது.
அது ஓ¡¢டத்தில்,
"தலையாலங்கானத்தில் தன்னொக்க இருவேந்தரைக் கொலைவாளில்
தலை துமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும்,
மஹாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபு¡¢ச்சங்கம் வைத்தும்....."
என்று குறிப்பிடுகிறது.
தலையாலங்கானத் துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்க காலத்தில் இருந்தவன். மதுரையில் சங்கம்வைத்திருந்த காலத்திலேயே மாபாரதம் தமிழ்ப்படுத்தப்பட்டுவிட்ட செய்தி
இதன் மூலம் புலனாகிறது. ஆனால் அக்காலத்தில் அதனைத் தமிழ்ப்படுத்திய புலவர் யார்என்பதும் தொ¢யவில்லை. அந்த நூலும் கிடைக்கவில்லை.
மூன்றாவது தமிழ்ச்சங்கம் முடிவுற்றபின்,அந்தச் சங்கத்தின் இலக்கியங்களில் எஞ்சியவற்றையெல்லலாம் திரட்டி, "எட்டுத் தொகை, பத்துப்பாட்டு" ஆகிய பதினென
்மேல்கணக்கு நூல்கள் என்னும்பெரும்தொகுப்பை யாரெல்லாமோ செய்திருக்கிறார்கள்.
இவற்றுள் "அகநாநூறு, புறநானூறு, நற்றிணை,குறுந்தொகை, ஐங்குறுநூறு," ஆகிய தொகை நூல்களுக்கு ஒருவர் கடவுள ்வாழ்த்துப் பாடியுள்ளார்.
அவர் பெயர், "பாரதம் பாடிய பெருந்தேவனார்". இவர் அநேகமாக கி.பி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். இவர் இயற்றிய பாரதமும் மறைந்து விட்டது.ஆனால் அதில் இருந்த
பாடல்களில் சிலவற்றை நச்சினார்க்கினியர் தம்முடைய உரைகளில் மேற்கோளாகக் காட்டி
யுள்ளார்.
இதன்பின், 9ஆம் நூற்றாண்டில் மூன்றாம்நந்திவர்மபல்லவனின் ஆதரவில் "பாரதம் பாடிய பெருந்தேவனார்" என்றே பெயர் பெற்ற இன்னொருவரும் இருந்தார். "பாரத வெண்பா" என்ற பெயா¢ல் அவர் இயற்றிய நூலில் மூல மஹாபாரதத்தின் பதினெட்டுப் பருவங்களில் மூன்றை மட்டும ்காண்கிறோம்.
அதற்குப ்பிறகு 13ஆம் நூற்றாண்டில் மூன்றாம்குலோத்துங்கசோழனின் காலத்தில் "அறநிலைவாசகன் த்ரைலோக்யமல்லனான வத்சராஜன்" என்பவர் ஒரு பாரத நூலை இயற்றினார். அந்த நூலும் கிடைக்கவில்லை.
சில நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றியவர்தான் வில்லிப்புத்தூரார். ஆனால் அவர் வில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் அல்லர். அவருடைய ஊர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடிநாட்டு சனியூர். ஸ்ரீவைஷ்ணவர்.
இவருடைய புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார்.
இவருக்கும் இவருடைய தம்பிக்கும்பங்காளிப்பகை.பாகப்பி¡¢வினையில் வில்லிப்புத்தூரார் தம்பிக்கு சமபங்குகொடுக்கவில்லை. ஆகவே சிற்றரசராகிய வரபதியாட்கொண்டானிடம் தம்பிமுறையிட்டான். பெரும்புலவரான வில்லிப்புத்தூராருக்கா புத்தி சொல்வது? எப்படி நியாயம் வழங்குவது? ஆகவே ஒரு தந்திரம் செய்தார். வில்லிப்புத்தூரா¡¢டம் பாரதத்தைத் தமிழில் பாடுமாறு கேட்டுக்கொண்டான்.
அவரும் பாட ஆரம்பித்தார்.
அதில் மூழ்கினார்.
அப்படியே ஆழ்ந்துவிட்டார்.
அப்போது ஓர் உண்மை அவருக்குப் புலப்பட்டது.
பாகப்பி¡¢வினைப் பூசலல்லவா பங்காளிகளுக்குள் மிகப்பொ¢ய பாரதப்போரைத் தோற்றுவித்துவிட்டது!
தம்பிக்கு¡¢ய பாகத்தை ஒழுங்காகக்கொடுத்துவிட்டார்.
ஆனால் பாரதம் பாடியதற்குப் பா¢சிலாக சந்தக்கவி பாடும் போட்டியில் தன்னிடம் தோற்றவர்களின் காதை அறுப்பதற்கு உ¡¢ய அதிகாரத்தை வாங்கிக்கொண்டுவிட்டார்.
அவா¢டம் அக்காலத்தில் காதறுந்த புலவர்கள் பலர்.
கடைசியில் அருணகி¡¢நாதர் தன்னுடைய "கந்தர் அந்தாதி" யின் 54ஆம் பாடலை வைத்து அவரை "Bowl out" செய்தார்.
"அருணகி¡¢நாதர்" படத்தில் இது சிறிதே நேரம் வரும் காட்சி என்றாலும் அதில் வில்லிப்புத்தூரா¡¢ன் ஆணவத்தையும் செருக்கையும் மனோகர் எப்படி வெளியிட்டுள்ளார் பார்த்தீர்களா!
Date: Wed, 17 Nov 1999 17:15:07 +0800
Subject: [agathiyar] MaaBaratham#2
மாபாரதம்#2
வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே இருக்கின்றன.மாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போ¡¢ன் இறுதியுடன் தர்மா¢ன் முடி சூட்டுதல்,பாண்டவர் அரசாட்சி என்றுமுடித்துவிடுகிறார்.
மொத்தப்பாடல்கள் 4350.
வால்மீகியின் ராமாயணத்திலிருந்துகம்பர் விலகியது போலவே, இவரும் பல இடங்களில் மூல கர்த்தாவாகிய வியாசா¢டமிருந்து விலகிவிட்டார்.
இவருடைய மகனாகிய வரந்தருவார் இந்த நூலுக்குப் பாயிரம் பாடியுள்ளார்.
அதிலுள்ள தமிழ்த் தாய் வணக்கம்,
பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்
திருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை,
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலேவளருகின்றாள்.
பொருப்பிலே பிறந்து = பொதிகைமலையில் பிறந்து
தென்னன் புகழிலே கிடந்து - பிறந்தவுடன் குழந்தையைக் கிடத்துவார்கள்
அல்லவா? கிடந்த இடம், பாண்டியனின் புகழ்
சங்கத் திருப்பிலே இருந்து
வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை - சமணர்களுடன் திருஞானசம்பந்தர் செய்த
புனல் வாதத்தில், திருமுகப்பாசுரம் எழுதிய ஏடாக வைகை ஆற்றில் மிதந்து,
ஆற்று நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது
நெருப்பிலே நின்று - சம்பந்தர் செய்த அனல் வாதத்தின் போது, திருநள்ளாற்றுத்திருப
்பதிகமான"போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம்" என்னும்
ஏட்டில் விளங்கி, நெருப்பில் இடப்பட்டும் எ¡¢யாமல் பச்சைப்பதிகமாக இருந்தது
கற்றோர் நினைவிலே நடந்து
ஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை- ஏனம்= வராகம் i.e. விஷ்ணுவின்வராக அவதாரம்.
அந்த பூவராக மூர்த்தியின் கொம்பில் ஏந்தப்பட்ட பாவை = பூமிதேவி
பூமியின் மருங்கில் வளருகின்றாள் தமிழணங்கு.
இப்பாடலில் உள்ள நயம், அந்த "பிறந்து, கிடந்து, இருந்து, தவழ்ந்து,
நின்று, நடந்து, வளர்ந்த", என்னும் குழந்தையின் ஏழு பருவங்களைக்
குறிக்கும் சொற்கள்தாம்.
ஒவ்வொரு பருவத்தின் ஆரம்பத்திலும் வில்லிப்புத்தூரார், திருமால் வணக்கத்தைச் சொல்வார்.
அதில் ஒன்று,
மாதுலன் ஆகியும், ஏதிலன் ஆகிய வஞ்சன்கஞ்சன் வரவிட்ட,
பூதனை தன்னுயிர் மொழிபாலொடு போதர உண்ட புயல்வண்ணா!
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயாமதுசூதா!
ஆதியும் அந்தமும் ஆகிய நின்புகழ் அல்லாது உரையேன் அடியேனே!
வில்லிப்புத்தூரா¡¢ன் கதைப்போக்கும்,கதாமாந்தர் படைப்பும், அவர்கள் பேசும்
பேச்சின் சித்தா¢ப்பும், சந்தவிருத்தமும் மிக நன்றாக உள்ளவை.கர்ணன் து¡¢யோதனனிடம் கூறுவதைப்பாருங்கள்.
"ஓர்ஊரும் ஓர்குலமும் இல்லா என்னை,
உங்கள் குலத்து உள்ளோ¡¢ல் ஒருவன் ஆக்கித்,
தேர்ஊரும் அவர் மனைக்கே வளர்ந்த என்னைச்
செம்பொன்மணி முடிசூட்டி அம்புராசி
நீரூரும் புவிபாலர் பலரும் போற்ற
நின்னினும் சீர்பெற வைத்தாய்! நினக்கே அன்றி,
ஏரூரும் கதிர்முடியாய்! உற்ற போ¡¢ல்,
யார்க்கினி என் உயிர் அளிப்பது?இயம்புவாயே!"
இதனாலேயே வில்லிப்புத்தூராரை"வில்லிப்புத்தூராழ்வார்" என்றும் அழைப்பார்கள். கம்பரைக்கூட "கம்ப நாட்டாழ்வார்" என்று அழைக்கும் வழக்கம் உண்டு.
இவர் இயற்றியதில் விடுபட்டுப் போன மீதி எட்டுப்பருவங்களையும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரங்கநாதக் கவிராயர் என்பவர் 2477 பாடல்களில் பாடிப்பூர்த்தி செய்துள்ளார்.
இதன் பின்னர் மாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மூதறிஞர் ராஜாஜி. அவருடைய "வியாசர் விருந்து"
இதுவரை எத்தனையோ லட்சம் பிரதிகள் விற்றுவிட்டதாக வானதி திருநாவுக்கரசு அவர்கள் என்னிடம் ஒருமுறை கூறினார். பிறகு அதற்கு ராஜாஜியின் விருப்பத்திற்கு இணங்க "மகாபாரதம்" என்று மறு பெயா¢ட்டார்கள்.
வியாசர் விருந்தைப் புகழ்ந்து கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ளார்.
"விண்ணமுதை ஒத்த வியாசர் விருந்தளித்த
புண்ணியனே! வேதாந்தப் போதகனே! - தண்ணிய நீள்
ஆழிசூழ் இவ்வுலகில் ஆழியான் இன்னருளால்
வாழி நீ! ஐயா, மகிழ்ந்து.
வி¡¢வான மொழியாக்கத்தைப் பலவால்யூம்களாகத் திருவான்மியூ¡¢லுள்ள உ.வே.சாமிநாதய்யர் நூலகத்தில் பலஆண்டுகளுக்கு முன்னர் கண்டதாக எனக்கு நினைவு இருக்கிறது. விசா¡¢த்துத்தான் பார்க்கவேண்டும்.
அதன் பின்னர் அ.லெ.நடராஜன் அவர்கள்"வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயா¢ல் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். அருணா பப்ளிக்கேஷன்ஸ் வெளியீடு.
மாபாரத இலக்கியம் தமிழில் பல்வேறு உருவங்களில் என்றும் இருந்தே வந்திருக்கிறது.
பொ¢ய எழுத்து மாபாரதக்கதைப் புத்தகத்தைப் பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பார்த்திருக்கிறேன். இதைப்பி¡¢த்து வைத்துக்கொண்டு ஒரு மாதி¡¢யாகராகம் போட்டுக்கொண்டு படிப்பார்கள்.இந்தப் பொ¢ய எழுத்து seriesஸிலேயே பாரதத் தொடர்பான பல கதைகள் இருந்தன. அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி, கீசகவதை, தர்மர் அசுவ மேத யாகம், துரோபதையாள் சுயம்வரம், கிருஷ்ணன் தூது, ஆரவல்லி சூரவல்லி கதை என்று சில புத்தகங்கள் இருந்தன.
பழங்காலத்தில் பல சிவன் கோவில்களில் பாரதக்கதை சொல்வதற்கு நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள். அதற்காக நிலங்கள் எழுதிவைத்தார்கள். அதை "பாரதப்புறம், பாரத விருத்தி" என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
அதைப ்பற்றிக்கூட ஒரு செவிவழிமரபு உண்டு.
மாபாரதக்கதை சொல்லுமுன்பாக ஒருதென்னங்கன்றை நட்டுவைப்பார்கள்.
கதை சொல்லி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகுமாம். கதையைப் பூர்த்தி செய்யும்போது அந்தத் தென்னங்கன்று வளர்ந்து மரமாகிக்காய்த்து குலை தள்ளியிருக்கும்.
அந்தக் காய்களைப் பறித்து அவற்றின் இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
இந்தமாதி¡¢ கதை சொல்வதற்காக, கதை சொல்பவர்கள் ஏதாவது பாடல்கள்,
உரைநடை இலக்கியங்கள், அல்லது காப்பிய உருவில் ஏதாவது பிரதிகள் வைத்திருப்பார்கள்.
மாபாரதத்தின் சில பகுதிகளை மட்டும்குறிப்பிட்ட தலைப்புகளில் ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
பாரதியா¡¢ன் "பாஞ்சாலியின் சபதம்" ஓர் எடுத்துக்காட்டு.