உச்சி வேளை
HIGH NOON

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                    சங்கஷ்டம் என்றதும் ஒரு படம் ஞாபகத்துக்கு வருகிறது.
                    அதன் பெயர் High Noon.
                    ரொம்பப் பழைய காலத்துக் கறுப்பு வெள்ளைப்படம்.
                    Gary Cooper என்னும் பெரிய நடிகர்தான் ஹீரோ.
                    சென்ற நூற்றாண்டில் மேற்கு யூ எஸ்ஸில் சிறு சிறு ஊர்களை நிறுவிக் குடியேறிய காலம். அங்கெல்லாம் இப்போது மாதிரி போலீஸ் எல்லாம் கிடையாது. மார்ஷல் ஷெரி·ப் (Marshall), (Sheriff) போன்ற கொத்தவால்கள் இருந்தனர். தகரத்தால் ஆகிய நட்சத்திரம் ஒன்றுதான் அவர்களுக்கு உரிய அதிகார அடையாளம்.
                    ஊரின் மேயர் அல்லது ஜட்ஜ்தான் ஷெரீ·புக்களை நியமனம் செய்வார்கள்.
                    மார்ஷலாகப்பட்டவர் அவருக்குத் துணையாக டெப்புட்டி  மார்ஷல்/ஷெரி·பை நியமித்துக் கொள்ளலாம்.
                    தேவைக்கேற்ப பொலீஸ் பட்டாளத்தைத் திரட்டிக்கொள்ளலாம். அதனை போஸ்ஸே(Posse) என்பார்கள்.
                    கேரி கூப்பர் மார்ஷல் கேய்னாக வருவார்.
                    காலையில் 10-35 மணிக்கு அவருக்குத் திருமணம் நடப்பதோடு கதை ஆரம்பமாகும். அவர் திருமணம் புரிந்துகொள்ளும் பெண் ஒரு க்வேக்கர் Quaker சமயப்பிரிவைச் சேர்ந்தவள். முற்றிலும் அஹிம்சாவாதி.  கசாப்புகூட சாப்பிடமாட்டார்கள். துப்பாக்கி, சூடு, சண்டை, கொலை, அது, இதுவெல்லாம் பிடிக்காது. மதக்கோட்பாட்டுக்கு விரோதம்.
                    திருமணம் முடிந்ததோடு அவருடைய மார்ஷல் பதவியை ராஜினாமா செய்து தகரநட்சத்திரத்தைக் கழற்றிவைத்துவிடுவார்.
                    அதே நேரத்தில் மூன்று ரௌடிகள் குதிரையில் வந்து ஊருக்குள் நுழைந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப்போவார்கள்.

உச்சி வேளை -#2

                    11 மணி அளவில் ரயில்வே ஸ்டேஷன் கிலார்க்குக்கு ஒரு தந்தி வரும்.
                    ·ப்ராங்க் மில்லர் என்பவன் ஒரு பயங்கரமான ரௌடி. அவனும் அவனுடைய அடியாட்களும் அந்த ஊரையும் சுற்று வட்டாரத்தையும் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக நடமாட முடிந்ததில்லை. விபசாரம், குடி, சூதாட்டம், கொள்ளை, கொலை என்று ஊரே திண்டாடிய சமயத்தில் கேய்ன் மார்ஷலாக வருவார். மிகவும் சிரமப்பட்டு அந்த ரௌடிக்கும்பலை ஒழித்துக்கட்டி, மில்லரையும் கொலைக் குற்றம் சாட்டி, அவனுக்குத் தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்திருப்பார்.
                    ஆனால் அவனுக்கு விடுதலை வழங்கியதோடு அல்லாமல் அதனைத் தந்தியின்மூலம் அறிவித்திருப்பார்கள். அவன் பகல் 12-00 மணி ரயிலில் அந்த ஊருக்கு வந்துகொண்டிருப்பான். அவனுடைய தம்பியும் இரண்டு சகாக்களும் அவனை வரவேற்பதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்கள். எல்லாரும் சேர்ந்து ஊர அறிய பட்டப்பகலில் கேய்னைக் கொல்வது என்பதுதான் திட்டம்.

                    ஊராட்கள் கேய்னையும் அவர் புதிய மனைவியையும் குதிரை வண்டியில் ஏற்றி விரைவாக அனுப்புவார்கள்.
                    இந்த மாதிரி ஓடிப்போவது கேய்னுக்குப் பிடிக்கவில்லை.
                    இத்தனை ஆண்டுகள் கழித்து ஐம்பதாவது வயதில் திருமணம் செய்துகொண்டு ரிட்டயர் ஆகும் ஆசாமி. ஒரு வீட்டுடன்கூடிய ஒரு பெரிய பண்ணையையும் வாங்கியிருந்தார்.

                    ஆனாலும் புறப்பட்டுப்போவார்.
                    மனதில் போராட்டம்.
                    மணியோ 11-10 ஆகிவிட்டது.

                    பண்ணையருகில் செல்லும்போது சொல்வார், "இந்த மாதிரி இதுவரைக்கும் நான் யாரிடமிருந்தும் ஓடியது கிடையாது".

                    அப்படியே யூ-டர்ன் அடிப்பார்.
                    நேரே ஊருக்கு வந்துவிடுவார்.
                    அங்கே பெரிய விவாதம்.
                    "இது என்னுடைய சண்டை. என்னைத்தேடி அந்த ரௌடி வருகிறான். நான்தான் அவனை நேருக்கு நேர் சந்திக்கவேண்டும். நான் இருந்து அவனுடன் போராடுவேன். போஸ்ஸே படையைத் திரட்டிக் கொள்வேன்", என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

                    அவருடைய மனைவியின் தந்தையும் அண்ணனும் ஒரு சண்டையில்தான் உயிரிழந்தார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தும்கூட துப்பாக்கிச்சண்டையில் சுடப்பட்டார்கள்.
                    ஆகவேதான் தான் க்வேக்கராக மாறிவிட்டதாகச் சொல்வாள்.
                    க்வேக்கர் என்போர் கிருஸ்துவ மதத்தில் ஒரு சிறுபான்மையினர். அவர்கள் அஹிம்சையையும் ஏகதார/பத்தினி விரதத்தையும் கடைபிடிப்பவர்கள். மாமிசம் உண்ணார்.

                    அத்துடன் கேய்னை விட்டுவிட்டு 12-00 மணி ரயிலில் ஊரை விட்டுச் செல்வதற்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டாள்.
                    ஸ்டேஷனில் அவள் அந்த மூன்று ரவுடிகளையும் பார்த்தாள்.

உச்சிவேளை -#3

                    ஸ்டேஷனில் இருப்பதற்குப் பதிலாக அருகிலிருக்கும் ஹோட்டலில் இளைப்பாறலாம் என்று அங்கு சென்றாள்.
                    அந்த ஹோட்டல்காரன் உள்பட பலர் மில்லர் வந்தால் மீண்டும் பிசினஸ் சூடுபிடிக்கும் என்று எண்ணுபவர்கள்.
                    கேய்ன் தம்முடைய ஆ·பீஸ¤க்குச்சென்று, தம்முடைய ஸ்டாரை எடுத்து மாட்டிக்கொள்வார். உதவி மார்ஷலுக்கு இது பிடிக்கவில்லை.
                    தன்னுடைய ஸ்டாரைக் கழற்றி வீசிவிட்டுச் சென்றுவிடுவான்.
    மணியோ ஆகிக்கொண்டிருந்தது.
                    கேய்ன் அந்த நான்கு கொலைகாரர்களுடன் சண்டையிட போஸ்ஸே சேர்க்கப் பார்ப்பார்.
                    யாரும் சேரமாட்டார்கள்.
                    ஒவ்வொர் ஆளாக ஒவ்வொரு இடமாக இங்கும் அங்குமாக
மட்ட மத்தியானத்தில் அலைந்துகொண்டே யிருப்பார்.

                    அப்போது அவருடைய பழைய டெப்புட்டி அவரை அடித்துப் போட்டு அப்படியே குதிரையில் வைத்து ஊரைவிட்டு அனுப்பப்பார்ப்பான். அவனுடன் சண்டையிடும்போது காயம்பட்டுவிடும்.

                    ஆனால் அடிபட்டுக்காயம் பட்ட நிலையிலும் கேய்ன்  தன்னுடையை பழைய டெப்புட்டியை வீழ்த்திவிட்டு ஒரு பார்பர் ஷாப்புக்குப் போய் அங்கு லோஷன் வாங்கி காயத்தில் ஒற்றிக்கொண்டிருக்கும்போது சுத்தியலால் ஆணி அடிக்கும் சப்தம் கேட்டது. அந்த பார்பர் சவப்பெட்டிக் கடையும் வைத்திருந்தான். உள்ளே சென்று அதட்டிவிட்டு வந்தான். அதன்பின் சப்தம் நின்றுவிட்டது. ஷாப்பிலிருந்து புறப்படும்போது கேய்ன் காசைத் தூக்கிப்போட்டுவிட்டு, மீண்டும் தொடர்ந்து ஆணி அடிக்கச்சொல்லிவிட்டுப் போவார்.

                    சர்ச்சில் கூட்டம் நடக்கும். அங்கும் சென்று ஆள் சேர்க்கப் பார்ப்பார். வரத் தயாராக இருந்தவர்களையும் மற்றவர்கள் தடுத்துவிட்டு, "இந்த ஊரில் கொலை, சண்டை முதலியவையெல்லாம் நடந்து பேப்பர்களில் வந்தால் இந்த ஊரை டெவலப் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களும் வரமாட்டார்கள் என்று ஒரு செல்வாக்கான ஆசாமி கேய்னை ஊரை விட்டுப் போகும்படி சொல்லி விரட்டிவிடுவான்.
                    அந்த நிலையில் ரிட்டயர் ஆகிய வயதானதொரு பழைய மார்ஷலைக் கூப்பிடப் போவார்.
                    அவரோ "இத்தனை காலமாக சட்டத்துக்கும் தர்மத்துக்கும் போராடி என்ன பயன்? இப்போதுதான் ஏதோ இருக்கிறதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வயதான காலத்தில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். நீயும் ஊரைவிட்டுப் போய்விடு" என்று சொல்லி அனுப்பி விடுவார்.
                    அவருடைய உயிர் நண்பனோ தான் வீட்டில் இல்லையென்று மனைவியைச் சொல்லச் சொல்லிவிடுவான்.
                    ஒரே ஒரு ஆள் போஸ்ஸேயில் சேர்ந்துவிட்டு இன்னும் ஆட்களைச் சேர்க்கச் சொல்லியிருப்பான்.
                    ஆளே கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், "இரண்டு பேர் நால்வருக்கு எதிராகவா?" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
                    மில்லரால் முடமாக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரன் தான் உதவுவதாக வருவான். கேய்னை மிகவும் மதிக்கும் சிறுவன் ஒருவனும் வருவான். 
                    ஆனால் அவர்களைக் கேய்ன் திருப்பி அனுப்பிவிடுவார்.
                    வெய்யிலில் தள்ளாடித்தள்ளாடி நடந்துகொண்டு வியர்வையைத் துடைத்துக்கொண்டு செய்வதறியாது அலைந்துகொண்டேயிருப்பார்.

                    ஒவ்வொரு இடமாக கேய்ன் பொக வர மணி 11-50-ஆகிவிடும்.

உச்சிவேளை -#4

                    தம்முடைய ஆ·பீஸ¤க்குபோய் ஒரு தாளை எடுத்து உயில் எழுதுவார்.
                    12 ஆக இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது ரௌடிகளை எதிர்ப்பதற்காகப் புறப்பட்டுப் போவார்.
                    இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த கேய்னின் மனைவி கேய்னைப் பார்க்க வீட்டுக்குச் செல்வாள்.
                    மணி 12-00.
                    ரயில் வந்து சேரும்.
                    மில்லர் வந்து இறங்குவான்.
                    நான்கு கேடிகளுமாகச் சேர்ந்து கேய்னைத்தேடி வருவார்கள். ஊரார் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருப்பார்கள்.

                    கேய்ன் மறைந்திருந்து இரண்டு ரௌடிகளைக் கொன்றுவிடுவார். அவர் தப்பித்துக் கொள்வார்.
                    ஆனாலும் விடாமல் விரட்டிவந்த மீதி இருவர் கேய்னைச் சுற்றி வளைத்துக் கொள்வர்.

                    கேய்ன் தப்பிக்கவே முடியாது. ஒருவனைத்தான் சுடமுடியும். மீதமிருப்பவன் அதே நேரத்தில் கேய்னைச் சுட்டுவிடுவான்.

                    அப்போது 'டுமீல்' என்று வெடிச்சப்தம்.    

                    துப்பாக்கிக்குண்டு ஒரு ரவுடியின்மீது பாய்ந்து அவனைக் கொல்லும்.
                    கேய்னின் க்வேக்கர் மனைவியின் கையில் ஒரு துப்பாக்கி புகைந்து கொண்டிருக்கும்.  
                    ஆனால் கேய்னின் மனைவியை மில்லர் பிடித்துக்கொண்டுவிடுவான்.
                    அவளை வைத்துத் தாம் தப்பித்துக்கொண்டு கேய்னைக் கொல்லும் திட்டம்.
                    அப்போது அந்தச் சிறுவன் உதவுவான். அந்தச் சமயத்தில் மில்லரை கேய்ன் கொன்றுவிடுவார்.

                    அதன்பிறகு ஊர் மக்களெல்லாம் வந்து சுற்றி நின்று பாராட்ட ஆரம்பிக்கும்போது தம்முடைய சட்டையிலிருந்த தகர ஸ்டாரைக் கழற்றிப் புழுதியில் போட்டுவிட்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு தம்முடைய பண்ணையை நோக்கிப் புறப்படுவார்.

                    இதில் கேரி கூப்பர் அற்புதமாக நடித்திருப்பார்.

                    அவர் முகத்தில் தத்ரூபமாக அவர் படும் சங்கடம், வேதனை, கையறு நிலை, பாதிப்பு முதலியவற்றைக் காட்டுவார்.

                    அந்தப் படத்தை முப்பத்தோரு நாட்களில் எடுத்தார்கள்.

                    கேரி கூப்பருக்கு அப்போது இரைப்பையில் புண்ணிருந்து கொண்டு ரத்தக்கசிவு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. அத்துடன் கடுமையான இடுப்பு வலி. அவருடைய மனைவியால் ஏற்பட்ட சிரமங்கள் கொடுத்த மனவேதனை.

                    அவருடைய டெப்புட்டியோடு சண்டையிடும் காட்சியிலும்கூட டூப் போடவிடாமல் தாமே நடித்தார். உண்மையிலேயே முகத்தில் காயமும் பட்டது.
                    அப்போது ஷ¥ட்டிங்கைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் சிரித்துவிட்டான்.
                    ஆகையால் ரீட்டேக் எடுக்கவேண்டியதாயிற்று.
                    அப்போதும் அயராமல் கடுக்காமல் மீண்டும் நடித்துக்கொடுத்தார்.

                    அந்தப் படத்துக்கு நான்கு ஆஸ்கார் பரிசுகளும் வேறு பல அவார்டுகளும் கிடைத்தன.
                    இதுவரைக்கும் வந்த Western Movies Genre-இலேயே மிகச் சிறந்த படம் என்று பெயரும் எடுத்தது.

                    நீண்ட நாட்களாயினும் கேரி கூப்பரின் அந்த சங்கடமும் வேதனையும் படர்ந்த அந்த முகத்தை மட்டும் மறக்கவே முடியவில்லை.

                    இன்றளவும்கூட.

அன்புடன்

ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



RETURN TO MAIN MENU