உடும்புப் பிடி
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி




                உடும்பு போனால் போகிறது, கை வந்தால் போதும்' என்பது ஒரு பழமொழி.
                இதற்கே இன்னொரு வடிவமும் உண்டு:
                'உடும்புக்கறி வேண்டாம்; கையை விட்டால் போதும்'.
                ஏன் இந்தப் பழமொழி தோன்றியது?
                உடும்பு என்பது ராட்சதப்பல்லி வகையைச் சேர்ந்தது. இதிலேயே பல சாதிகள் இருக்கின்றன.
                உடும்பின் பிடி மிகவும் பிரசித்தமானது. அதன் கால்களில் மிகக் கூரான, உட்பக்கம் வளைவான நீண்ட நகங்கள் இருக்கும்.
                இந்தக் கால்களில் உள்ள விரல்கள், நகங்களால் பிடிக்கும்போது கால்களில் உள்ள தசை நாண்கள் பூட்டிக்கொண்டுவிடும்.
                பிடி இறுக்கமாக விழுந்துவிடும்.
                அதைப் பிடிக்கும்போது அதன் பிடியில் அகப்பட்டுவிடக்கூடாது. பிடியை விடாது. பிடித்து இழுத்தால் சதையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும்.
                கடிக்கும். சிறிய கூரான, ரம்பம்போன்ற பல்வரிசை அதற்கு உண்டு. கடியும் விஷத்தன்மை கொண்டது.
               இப்படிப்பட்ட உடும்பை ஏன்தான் பிடிக்கவேண்டும்?

                உடும்புக்கறி சில மருத்துவ குணங்கள் உள்ளது. ஆகவே சில நோய்களுக்கு இதனைச் சாப்பிடச் சொல்வார்கள்.
                மேலும் அது ஒரு gourmet item. தனித்தன்மை பொருந்திய ருசி உடையது. விசேடமாக உண்ணப்படும் பொருள் - வௌவால் கறியைப் போல.
                இந்தக் காரணங்களால் உடும்புவைப் பிடிப்பார்கள்.
                அந்தத் தருணத்தில் அதனிடம் பிடிபட்டால், கை அதோ கதிதான்.
                ஆகையால்தான் இந்த இரு பழமொழிகளும் ஏற்பட்டிருக்கின்றன.

                அக்காலத்தில் மிக உயரமான கோட்டைகளில ஏறுவதற்கு உடும்பைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதன் இடுப்பில் கயிற்றைக்கட்டி கோட்டைச் சுவரின்மேல் எறிவார்களாம். சுவற்றில் இருக்கும் மேடு பள்ளம் பார்த்து, உடும்பு தன் நகங்களை வைத்து இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும்.
                அந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு சுவற்றில் ஏறிவிடுவார்கள்.
                உடும்புகளை வளர்த்து அவற்றை இதற்கென பயிற்சி கொடுப்பவர்களும்      இருந்தனர்.
                சாம்ராட் சிவாஜியின் காலத்தில் பிரம்மாண்டமான மலைக்கோட்டைகள்   நிறைய இருந்தன. அந்த மலைக்கோட்டைகளை எவ்வகையிலும் பிடிப்பது      கஷ்டம்.
               சிவாஜி தம்முடைய படையில் உடும்புப் பிரிவு ஒன்றை வைத்திருந்தார்.
               உடும்புக்கு 'கோர பாதா' என்ற பெயருண்டு.
               கோர' என்பது 'கூர்மையான' என்ற பொருளையும் தரும். 'பாதா' என்பது பாதம்.
               மராத்திய மொழியில் உடும்பை 'கோர்பாட்' என்பார்கள். உடும்பு  வளர்ப்பவர்களை 'கோர்படே' என்று அழைப்பார்கள். இவர்களின் அணி, சிவாஜியின் படையில் இருந்தது.
              இப்போது இந்தப் பெயர், மராட்டியர்களிடையே வழங்கும் surname-களில் ஒன்றாக விளங்குகிறது.
              திருடர்களும் உடும்பை இதே காரணத்திற்காக வைத்திருந்தார்களாம்.
              மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குள் உடும்பைப் பயன்படுத்தியே  அழகர் மலைக்கள்ளன் ஒருவன் உட்புகுந்ததாகக் கூறுவார்கள். அந்தக்  கள்ளன், திருமலை நாயக்கரிடம் சவாலிட்டிருந்தானாம்.
          
               உடும்பைப் பிடிப்பதை சர்வ சாக்கிரதையாகச் செய்யவேண்டும்.       
                இல்லையெனில் அது நம்மைப் பிடித்துக்கொண்டுவிடும். எந்த இடத்தைப  பிடிக்கிறதோ, அதனை விடாது. பிடித்து இழுத்தால் சதையைப் பிய்த்துக் கொண்டு  வந்துவிடும். சில சமயங்களில் ஏடாகூடமாக ஏதாவது அங்கத்தை  எக்கச்சக்கமாகப் பிடித்துக்கொண்டு விட்டால் போச்சு. 'சிக்கெனப் பிடித்தேன்;     எங்கெழுந்தருளுவது இனியே', என்ற கதைதான்.

                  இன்னும் கொஞ்சம்...அடுத்து...

                                                                                                                                     
GO TO PART II

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU