வாய் ஒன்று பேச,
மனதொன்று சிந்திக்க...
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ். ஜெயபாரதி
JayBee
நம் மனதில் ஒரே சமயத்தில் இருவேறு சிந்தனைகள்
ஓடமுடியும். அவை இருவேறு திக்குகளிலும் ஓடக்கூடும்.
'வாயன்று பேச மனசொன்று சிந்திக்க'
என்ற பழம்பாட்டு வரிகள் போல.
சாதாரணமாக தன்னிச்சையாக
நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் இருவேறு திசை எண்ணங்கள் ஓடும். ஆனால் சிலருக்கு ஒரே சமயத்தில்
பல்வேறு திக்குகளில் மனதின்
மனதில் ஏற்படும் எண்ணங்களை அவர்கள் இஷ்டத்துக்கு ஓட்டமுடியும்.. இதை Polyphasic
Thinking என்பார்கள். இருவேறு எண்ணங்களை ஓடவிடுவதை Biphasic
Thinking என்பார்கள். அவதானக் கலையிலும் இது சம்பந்தப்படும்.
சிலருக்கு இரண்டு
கைகளாலும் எழுதமுடியும். அவர்களில் சிலருக்கு இன்னொரு அதிசய ஆற்றல் இருக்கும். வலதுகையால் ஒரு விஷயத்தைப்
பற்றியும் இடது கையால் இன்னொரு
விஷயத்தைப் பற்றியும் ஒரே சமயத்தில் எழுதுவார்கள்.
பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராச்சார்யார் என்றொரு மகான் இருந்தார். ஸ்ரீவைஷ்ணவர். மிகப
்பெரிய கல்விமான். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் மேதைத் தமிழர்களின்
வரிசையில் உள்ளவர்.
அவர் ஒரே நேரத்தில்
இரண்டு கைகளாலும் சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் ஒரே சமயத்தில் எழுதுவார்
என்று அவரை அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
காளமேகப்புலவர்,
திருமலைராயனுடைய அறுபத்துநான்கு தண்டிகைப் புலவர்களுடன் ஏற்பட்ட போட்டியில்
எமகண்டம் பாடியபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட சமிசைகளில் ஒன்று விசித்திரமானது.
(காளமேகம் எமகண்டம்
பாடியது பற்றியும் எமகண்டம் பாடுவது என்றால் என்ன என்பது பற்றியும் வேறொரு கட்டுரையில் காணவும். (அந்தக்
கட்டுரையை வலையேற்றம் செய்யும்போது இங்கிருந்து
அதற்கு Link கொடுக்கப்படும்).
'சமிசை' - இது என்ன?
இது ஒரு குறிப்பு.
வேண்டுகோளாகவோ ணையாகவோ கைச்சைகையாகவோ தரப்படும்.
எமகண்டப் போட்டியில,்
"இன்ன
சொல்லைவைத்துப்பாடு",
"இன்ன
சொல்லில் ரம்பித்து இன்ன சொல்லில் முடி', 'இன்னின்ன இடங்களில் இத்தனை தடவை
இன்ன சொல் வருமாறு பாடு', 'இதற்கும் இதற்கும் பொதுவாகச் சிலேடையாகப் பாடு"
-
இப்படியெல்லாம்
சமிசைகள் கொடுக்கப்பட்டன.
எமகண்டப ்போட்டியில்
காளமேகப்புலவர் பாடிய அந்த அறுபத்துநான்கு பாடல்களும் அற்புதமானவை; வியக்கவைப்பவை.
மனிதனின் ingenuity-யின் உச்சங்களில் ஒன்று. திருஞானசம்பந்தரின்
மாலைமாற்று போன்றவையும் அத்தன்மை யுடையவைதாம்.
இந்த மாதிரி ingenuity-யை
வெள்ளைக்கரர்கள் மாதிரி கண்டுபிடிப்புக்களில் தமிழர்கள் ஈடுபடுத்தவில்லையே
என்று சொல்வாரும் உண்டு.
அவர்கள் ஒன்றைச்
சிந்திப்பதில்லை.
Right
Hemisphere Thinking, Left Hemisphere Thinking ஆகிய
இரண்டுமே வெவ்வேறு
திசைகளில் செல்பவை. இருவேறு போக்கும் நோக்கும் உடையவை.
கற்பனையில் ஆழ்ந்திருக்கும்
ஒரு கவிஞனைப் பிடித்து cyclotron-ஐ டிசைன் போடு என்றால்
எப்படியிருக்கும்? Cyclotron டிசைன் செய்வதற்கும்
கற்பனை கனவெல்லாம் வேண்டித்தானிருக்கும்.
ஆனால் அது மூளையின் வேறு பாதி.
இது வேறு அது வேறு.
இன்னும் கொஞ்சம்
எல்லையைத் தள்ளிப் பார்த்தால், வள்ளுவர் சொல்வதை இங்கு காட்டலாம்:
இருவேறு உலகத்தியற்கை;
திருவேறு
தெள்ளியராதலும்
வேறு
இதன் அடிப்படையே
மூளையின் இரு வேறு பாதிகளின் இயக்கம்தான்.
சரி. சொல்லவந்ததுக்கு
வருகிறேன்.
காளமேகத்துக்குக்
கொடுத்த சமிசைகளில் ஒன்று, அவர் ஒரே வெண்பாவில்
காமத்தையும் பக்தியையும் அடுத்தடுத்த
சொற்களில் காட்டி பாடலை அமைக்கவேண்டும்.
அமைத்தார்.
ஒருவன் பெருமாள்
கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறான். அப்போது அங்கு
ஓர் அழகிய தேவதாசி வந்து, எதிர் வரிசையில்
நின்றுகொண்டு சாமி கும்பிடுகிறாள்.
நம்ம பக்த சிகாமணிக்கு
மனதெல்லாம் அங்கு சென்றுவிட்டது.
வாய் கோவிந்த நாம
சங்கீர்த்தனத்தில் ஈடுபடுகிறது.
ஆனால்
மனதோ?
இந்தோ திலகநுதல்,
ராமாராமா, வனசக்
கொந்தோ களபமுலை,
கோவிந்தா -சந்ததமும்
வேலோ இணைவிழிகள்,
வேங்கடவா, நல்லவயிறு
ஆலோ,
கா நாராயணா!
அந்தப் பாடலைச்
சற்றுப் பகுத்துப் பார்ப்போமே?
இந்தோ திலகநுதல்?
வனசக்கொந்தோ களபமுலை?
சந்ததமும் வேலோ இணைவிழிகள்?
நல்ல வயிறு ஆலோ?
ராமாராமா, கோவிந்தா,
வேங்கடவா, நாராயணா காவாய்!
திலகம் தரித்த
பிறைச் சந்திரனைப்போன்ற நெற்றி
வனசம் - தாமரை
மொட்டோ சந்தனச்சாந்து பூசிய கொங்கை.
காளிதாசன் கூறியுள்ள
உவமையன்று நினைவுக்கு வருகிறது.
தடாகமொன்றில் குளித்துவிட்டு
ஓர் இளம்பெண் ஈரத்தோடு வருகிறாள். அப்போது ஈரம் சொட்டச ்சொட்ட நின்ற அவளுடைய
மார்பகத்துக்கு உவமை கூறுகிறார் - நுனியில் வண்டு அமர்ந்திருக்கும் தாமரை
மொட்டுப் போல.
இணைவிழிகள் வேல்
போன்றவை.
நல்ல வயிறு ஆலிலை
போல - இந்த இடத்தில் 'வயிறு' எனப்படுவது நாம் சாதாரணமாக இப்போது குறிப்பிடும்
வயிறல்ல.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU